சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.01.2023
கவி இலக்கம்-207
சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில்
————————————————
சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில்
அவரோடு வாழ்ந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்
அன்பு பொழிந்து வாழ்ந்ததில் ஒரு மோகம்
சிரிப்பு முகத்தில் கண்டதில்லை சோகம்
நோயுற்ற நேரத்திலும் கண்டதில்லை தேகம்
அன்பு நிறை அப்பாவாக கிடைத்தது பெரும் யோகம்

உங்களிடத்தில் பெறவில்லை வெறுப்பு
எங்கள் தேவைக்கு கூறியதில்லை மறுப்பு
அன்பு காட்டி வளர்த்ததே பெரும் சிறப்பு
தாங்க முடியவில்ல உங்கள் இறப்பு

நல்வழி காட்டி வளர்த்தீர்கள் மண்ணில்
குறைவின்றி வாழ விழிப்புடன் கண்ணில்
இறைபணி ஆன்மீகம் புரிந்தீர்கள் பணியில்
இறைவன் பாதமதில் வாழ்வது 28.01.23 விண்ணில்
நான் என்றும் சிந்தித்த நினைவில் மண்ணில்