சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.12.2024
இலக்கம்-289
“ஈரம்”
————-
ஈரமான கல்லுக்குள்ளே
தேரையின் குடியிருப்பு
ஈரமான நெஞ்சினிலே
மனைகளில் நடிப்பு
ஈரமான றோஜாவே
இதழ்களின் விரிப்பு
ஈரமான மண்ணிலே
வித்துக்களின் முளைப்பு
ஈரமான குடிசையிலே
மழையின் ஒழுக்கு
ஈரமான உடைகளாலே
உடலிலே பெரும் விறைப்பு
ஈரமற்ற மனிதர்களாலே
இலங்கை பொருளாதாரம் அற்று
மனிதர்கள் வெறுப்பு
ஈரமான இன்றைய அரசியல் ஆட்சியிலே
மக்களின் மனதில் மிக்க
மகிழ்வு
ஈரமான புலம்பெயர் மக்களாலே
தாயக மக்களுக்கு
பெரும் வாழ்வில் சிறப்பு
ஜெயா நடேசன்
ஜேர்மனி