சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.09.2024
கவி இலக்கம்-279
“விடியுமா தேசம்”
——————
இன்று விடியும் நாளை விடியும்
என்று எதிர்பார்த்து காத்து கிடந்தோம்
கண்ணும் கெட்டது கனவும் தொலைந்தது
இன அழிப்பு முக்கிய பங்கானது
தமிழர் அழிப்பு மிகவும் அதிகமானது
இரத்தம ஆறாய் ஓடிய தேசம்
உயிர்களை அழித்து வேடிக்கை பார்த்தது
யார்தான் எடுத்தனர் அக்கறை
ஐக்கிய நாடும் எம் தலைவர்களும்
அறியாதிருந்தவர்களா அல்லது அறிவீலிகளா
மக்கள் விட்ட கண்ணீரும் ஒப்பாரியும்
இறந்தோரின் கூக்குரல் அழுகையும்
இறைவன் காதில் கேட்கவில்லையா
உண்மைக்கு நீதிக்கு அழிவில்லை
இளையோர் கையில் நம் தேசம்
செல்லும் வரை நல்ல தலைவர்கள் வரும்வரை
எப்போ ஒருநாள் விடியும் நம் தேசம்
காத்துக் கிடப்போம் விடியும வரை
ஜெயா நடேசன்