சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.12.2022
புத்தாண்டே வருக வருக
———————————-
ஆங்கில புத்தாண்டே புத்தாண்டே
புதுப்பொலிவுடன் புலர்ந்து வருக
புதுச் சேதிகளை பொலிவோடு தருக
மக்கள் மனதில் மகிழவைக் கொண்டு வருக
மனித நேயம் மாண்புடன் காக்க வருக
வன்கொடுமை போதை ஒழிய வருக
நன்நெறி பண்புகளை வளர்க்க வருக
பசி பட்டினி பொருளாதார தீர்க்க வருக
உணவு உறைவிடம் கிடைக்க வருக
கணப்பொழுதில் துன்பம் களைய வருக
மக்கள் மனிதில் இருளகற்றி ஒளியோடு வருக
நல்லதை நினைத்து நலம் தர வருக
பொல்லாத காலங்கள் தொலைத்து வருக
போனது போகட்டும் நல்லது நடக்கவே வருக
நிலை வாழ்வில் இயேசு பாலன் வருகை
நல்வரவு நிறைவான வாழ்வாகவே தருக