சந்தம் சிந்தும் கவிதை

Jamunamalar Indrakumar

தவிப்பு
———-
மண்ணில் உயிர்கள்
பிறக்கத் தவிப்பு
இறக்கை முளைத்துப்
பறக்கத் துடிப்பு
கால்கள் ஊன்றி நடக்கச்
சிறப்பு
மழலை மொழியை கேட்க இனிப்பு
பறவை ஒலிகள் இசையாய்
இசைவு
அழும் குரல்கள் குறைக்க
நினைப்பு
ஊட்டும் உணவை
உண்ணச் சுவைப்பு
உண்ணும் உணவை
தேடிக் களைப்பு
களைத்த உடலைத்
தேற்றும் ஓய்வு
ஓயும் நிலையில்
தவிப்பும் விடுப்பு

ஜமுனாமலர் இந்திரகுமார்