சந்தம் சிந்தும் கவிதை

genga stanley

இலக்கு

கொக்குக்கு பெரிய மீன்
கிடைக்கவேண்டும் என்ற இலக்கு
ஊக்கத்தால் மாணவன் பட்டப்
படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கு.
ஆக்கங்கள் அழக்காகப் புனைந்து
அதில் வெற்றி பெறும் இலக்கு
தேக்கிய எண்ணங்கள்
திடமாக வெளிவிடும் இலக்கு.
தமிழர்கள் ஒற்றுமையாக
ஒருங்கினைவது ஒரு இலக்கு
தமிழ் எழுத்தே எங்கும்
கானுதலும் ஒரு இலக்கு
நாட்டு மக்களுக்கு உதவி
செய்யும் இலக்கு
கேட்டு கேட்டு அலுத்துவிட்டது
மீட்டுப் பெறும் இலக்கு
போட்ட விதை முளைத்து
பெருவிருட்சமாகுமா என்ற இலக்கு
தேச மக்கள் எல்லாம்
தேசியத்துடன் வாழலாம் என இலக்கு
இலக்குகள் ஆயிரம் இருக்கும் ஆனால்
நேர்மை ,நீதி விலகா
இலக்கை அடைதல் வேண்டும்

நன்றியுடன் கெங்கா ஸ்ரான்லி