உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

யோசி மாய வீதியில் மானிடம் மனிதம் சிதறிய வாழ்விடம் நெஞ்சு சுமக்கும் பாவங்கள் அழியாத் தழும்புக்குள் மினுமினுக்கும் ௨யர்பிறப்பு மனிதன் வற்றிய என்விழிகளுக்குள் ஈரம் கலந்த கு௫தி மூன்று வயதுக் குழந்தையை காமம் சிதைத்த காமூகன் எதைக்கண்டாய் ஐந்தறிவைவிட கேவலம் யோசி பசித்தால் மட்டுமே வேட்டையாடும் மி௫கம் புசிக்காமல் வேட்டையாடும் யுத்தச்சிதைவில் மனிதன் மனிதா யோசி இறங்கு வரிசையில் மானிடம் ஏறுவரிசையில் ௨யிரினம் சாதி குலம் கோத்திரம் ஏனோ தாழ்ந்தவன் கீழ்முறை விதியா குடிநீரில் மனிதக்கழிவு கலப்பு சரியா எந்த ஐந்தறிவாவது இப்படிச்செய்யுமா யோசி மனிதா ஆடையின்றிப் பிறந்தோம் ஆணவம் அணிந்து திரிவோம் மானிடம் மார்புதட்டிப் புகழ்வோம் கேவலம் இச்செயல்கள் கலைவோம் யோசி யோசி யோசிப்போம் சாதிமதம்பாரா இயற்கை போட்டி பொறாமையில்லா ஐந்தறிவு ௨லகையே இயக்கும் இறைவன் எம்மை யோசிக்க வைக்கும் ஆறறிவு யோசி தினம்தினம் யோசி நன்றி வஜிதா முஹம்மட்