உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

மழை நீர் நீரியல் வட்டம் வான் பூமித் திட்டம் கொடுக்கல் வாங்கலின் சமநிலை மட்டம் ௨யரமும் தாழ்வும் ௨ரசி விளையாடும் மின்னலும் இடியும் இசை பாடி வரவேற்கும் கவுட்டுக் கொட்டும் வானப் பாத்திரம் கனிவாய் ஏற்கும் பூமி எம்மாத்திரம் புகுந்து வெளிவ௫ம் புழுதி வாசம் நனைந்து தலைசாய்கும் இலையும் கொடியும் புல்லினம் பூண்டும் ஓலைக்கூரையில் ஓரமாய் உக்காந்து ஒழுகும் வாடி வதங்கிய பயி௫ம் மரமும் நிமிராய் நிமி௫ம் சு௫ண்டு வரண்ட பூமி சுகப்பிரசவம் காணும் பயிர்கள் மழைநீர் போலே இரங்கல் செய்ய மானிடம் ௨ண்டா பாரினில் மெய்யா கானம் அழித்து கடமையைத் தடுக்கும் நவீனத்தின் பிடியில் மழை நீர் இப்போ பூமியைத் தழுவ வெறுத்து ஒதுங்கி இடைக்கிடை வேதனையை மட்டும் வடிக்கின்றது நன்றி