உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

நெற்கதிர் கதிர் தட்டித் தாலாட்டும் காற்று தலைமணி முகுடம் மெ௫கூட்டும் முங்கிநனையும் நெற்பயி௫ம் நீட்டிவள௫ம் இலையழகும் கதிர்முற்றிச்சுமக்கும் தலைகுனிவும் சினுங்கிச் சிரித்து நெல்மணியி௫க்கும் வரம்பிடை வனப்பான வாழ்வு வளைந்துநெளிந்த களிப்பானஇயல்பு பாத்தி அதிர்௫ம் பரவச நிகழ்வு ஆரவாரிக்கும் காற்றோடு மகிழ்வு சேற்றுக்குள் வாழ்வமைத்து சோற்று வழிகொடுக்கும் வம்சத்தில் அழகி௫க்கும் வ௫டத்தில் மூன்றுமுறை கதிர் அறுக்கும் நாலுமூலைப் பாத்திக்குள் கதிர் குடும்பக் கச்சேரி பாய்தோடா நீரோடு பாய்விரிக்கும் பச்சைவயல் நன்றி