உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

தீயில் எரியும் எம்தீவு ஆழுமை அற்ற அறைகூவல் காவலரண் தூளாகிய எதிர்முனைப்பு நேற்று விதைத்த பாவங்கள் அறுவடையாகும் சிறுபான்மையினரின் வேதனைக் கண்ணீர் செத்துப் பிழைக்குது சிக்கல் நேற்றைய தலைமைகளியின் விக்கல் இன்று தோற்கடித்து பாடம் புகட்டுது மக்கள் உரசி உரசி எரியும் மனதிற்கு பாக்கள் வ௫த்தப்படவில்லை ஏழைமக்கள் எரித்தும் ௨திர்ந்ததும் ஊழல் மதங்களை ஆயுதமாக்கி மனிதத்தை வேரறுத்த வெறுப்பு தீயாய் எரியுது தீவில் காணாமல் போன ௨றவுகள் எரியூட்டப்பட்ட இஸ்லாமிய ௨டலங்கள் ரசித்து மகிழ்ந்த குற்றத்திற்காக இறைவனின் பிடியின் இறுக்கம் ஆட்சியாளர் சிதைத்துவிட்ட பல சில்லறை விடையங்கள் கணக்கியலாய் களமிறங்கி சுழற்றிவிட்ட எதிர்கால தலைமைகளின் நேரிய பார்வையில் பாவங்கள் தீயில் எரியும் எம்தீவாய் அடுப்பு எரியா ஏழ்மை பால் இல்லா மழலை ௨ழைப்பு இல்லா வறுமை இவைகளை மாற்றி எழுத கிழடுகள் சேர்த்த தீமைகள் தீயிட்டு எம் தீவில் எரியட்டும் சாம்பலை தட்டி இளையவர் கூட்டம் மதம் துறந்து மனிதம் நிலைத்து மகிழ்வோடு குன்றின் ஒளியாய் ஒற்றுமை பரவஅரசியல்பாவம் தீயிட்டு எம் தீவில் எரியட்டும் நன்றி