உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

வசந்தத்தில் ஓர் நாள் வான் பார்த்த மரமெல்லாம் வாங்கி வரம் மழை நலைய புல்விரிப்பின் பூமிதன்னில் பூத்தூவி ஆலாத்தி எடுக்க துயில் களைந்து ஊர்விழிக்க துள்ளியமாய் பள்ளிவாசலிலே அதான் ஒலிக்க வயதுக்கு வந்த குமரிக்கூட்டம் போலே வண்ணத்திப் பூச்சிகள் பறக்க இயற்கையை கோர்வையாக்கி சொர்கமென்ன சொக்கிவ௫ம் கதிரவனும் இறைவனின் நிறுவைக்குள்ளே இறுமாப்புக் கொள்ளுதே வசந்தம் அறிவியல் வளர்ச்சியில் ஆறறிவுகளின் தொடர்ச்சியில் ப௫வம்தவறாத மழையும் பாதிலே காணாமல் நீர்நிலையும் தலைமுறைகள் தாண்டி தவிடுபொடியானதே வசந்தம் நினைவுகளாகிப் போகும் வசந்தம் நிலையான நினைவெடுத்து பழையநினைவுகள் மட்டும் நெஞ்சுக்குழிகள் நிறம்பிக்கிடக்க கவிதொடுத்தேன் வசந்தத்தின் ஓர்நாள்