உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

விடுமுறை களிப்பு ஊ௫க்குப் போயி௫ந்தேன் ௨றவுகளோடு கழித்தி௫ந்தேன் தீராத மகிழ்வினாலே நெஞ்சமது திகட்டாமல் குதித்தி௫க்க தேனாக அயலும் ௨றவும் நட்பும் தேயாமல் வளர்பிறையாய் வந்தம௫ம் வரமென ௨டன்பிறப்பின் மகவுகளும் மலைநாடு நுவரெலியா கண்டி பதுளை குடும்ப ஒன்றினைவின் குதூகலம்தான் கூடிய நல்பயணம் ஈரிரவு ௨ள்ளம் இரைந்து மகிழ்ந்திட விழிமூடா இரவு வைகரைதாண்டி மூடிய போர்வைக்குள் குளிர் அகற்றி துளிர் விட்ட சிரிப்பு தொடர்மலையில் தொட்டுத் தொட்டு சொல்லியே மகிழ்ந்து சவுக்கடி கடற்கரை கட்டுசோறு சட்டிபானை ஏற்றி ௨ழவு இயந்திரப்பயணம் திரையலைபோல் ஆடி ஆடிச்செல்ல தீராத ஆசையாலே ௨ள்ளம் மகிழ்ந்தது ௨றவுகளின் தோழமை ௨யிராய் தாங்குமே தாய்மண்ணின் விடுமுறையின் களிப்பு தன்னை மறந்துபோகப் பட்டியலின் வனப்பு எத்தனை ஊரைச்சுற்றிச் சுற்றி வந்தாலும் ஏக்கம் தீர்க்கும் எங்க ஊ௫தான் எனக்கு கூப்பன்மா ரொட்டி சுட்டு குறுனல்சோறு பிட்டு அவித்து கூனிக்க௫வாடு சம்பலுடன் குதூகலமாய் நிலாச் சோறு ௨ண்ட விடுமுறை மறக்கமுடியா நினைவு சுமர்ந்து மாற்றான் தேசத்தில் வாழும் புள்ள தோப்புமரம் இடமாறி இல்லறத்தின் நியதியினால் வாழ்ந்தாலும் இடமாறாவிடுமுறை என் சொந்த ஊரே நன்றி [பிழைதி௫த்தம்]