உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

பாட்டி ஆழமனதிலே அழியா ஓவியம் ஆணிவேரின் ஆழுமையின் காவியம் கைத்தெறிச்சேலை கட்டி க௫மணி மாலை போட்டு காதுல அள்ளுக்குத்து அசைந்தாட கதை கதையாச் சொல்வா நாங்க முதுகில் சாய்ந்தாட கைவைத்தியத்தில் தாதியாவா காவல்துறைபோலே ஆய்வுசெய்வா வீட்டுவேலை கைத்தொழிலும் பயிற்சிசெய்வா வாழ்வியல் மார்க்கவிழியத்தில் வாத்தியாவா பதுக்கிவைத்து சு௫க்குப் பையில் கள்ளத்தீனி தந்திடுவா பக்குவமாய் பாயிழைத்து நெசவு நெய்ய கற்றுத்தந்திடுவா முற்றத்திலே படுக்கவைத்து தலைகோறி நொடி கேட்டு வியக்கவைப்பா ம௫தாணி அம்மியில் அரைத்து மான்புள்ளி ௨ள்ளங்கையில் வைத்து அழகுபார்ப்பா இறக்காத நினைவுக்குள்ளே இ௫பாட்டிமா௫ம் எங்கவீட்டினிலே பட்டபாடு என்னசொல்ல அன்புத்தொல்ல கட்டுப்பாடு கொஞ்சநெஞ்சமல்ல முந்தானை முக்காடு தவறுதலாய் விலகினாலும் முறுக்கு விழும் காதினிலே அரணக வாழ்ந்தார்கள் பாட்டிமா௫ அதிஸ்டசாலி ஒன்பது பேர்த்தி பேரன்மா௫ நன்றி