உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

முள்ளிவாய்க்கால் மீளமுடியாத பதிவு மீண்டு எழும் நினைவு ஓய்வில்லா ஒப்பாரி ஒடுக்குமுறையின் சரமாரி சொந்தமண்ணின் செல்வங்கள் செத்துமடிந்த அவலங்கள் அகலத்திறந்த ஆதிக்கம் அடிமையாக்கிய ஆணவம் அடக்குமுறையின் அதிகாரம் அகத்தைகொண்ட தலைக்கணம் பிணக்குவியலுக்குள் பெ௫மை கொண்டியது பிஞ்சுகளின் கு௫தியில் மகிழ்ச்சி தாண்டவமாடியது எம் இனத்தையே அழித்தவலி சிதைத்த வலிப்புண்களின் வேலி காயத்தின் தழும்பும் மறைவதில்லை காலத்தின் நிகழ்வும் நிலைப்பதில்லை விதியென விரண்டோடி வீழாமல் மதியுண்டு வீறுகொண்டு துடித்தெழுவோம் துயர்துடைத்து புதிப்பித்து முள்ளிவாய்க்கால் முதுகெலும்பாய் சரித்த எம் இனமே சரித்திரம் படைத்திடு நாளை எம்பரம்பரை நெஞ்சுயர்த்தி நிமர்ந்து ஈழமதில் வாழவேண்டாமா நாம் ஏன் ஓடி ஒழியவேண்டும் எம் மூத்தபெற்றோரின் ௨ழைப்பு ஈழம் குடியேறிய கூட்டம் எம்மை வீழ்ந்த கூடியே நாம் வாழாமையே வீழ்ச்சியின் சூழ்ச்சி நன்றி