Selvi Nithianandan
Selvi Nithianandan
ஆற்றல்
ஆற்றல் என்பது
அவரவர் தனித்திறமை
ஆணிவேராய் பற்றி
அவனியில் திறமையானரே
ஆளுமை ஏற்ற
இறக்கமாய் பற்றிக்கொள்ளும்
அடங்கா மனிதரும்
தோல்வியை தட்டிக்கொள்வாரே
இலட்சியம் காணவே
இரவு பகல் கணியார்
இறுமாப்பாய் இறுதிவரை எவருக்கும் பணியார்
ஆற்றல் இருபாலுக்கும் உண்டு
தூற்றல் துன்பம் எனக் கொண்டு
போற்றல் என்றென்றும் நன்றே
ஏற்றலாய் வெற்றி வாகை சூடியே
