உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

pon.tharma.

pon.tharma.

வணக்கம் . இது வியாழன் கவி . இலக்கம் -537 ஆகா வியப்பில் விழிகள் .(15.03.23.) ---------------------------------------- பற்றுடையார் (இவர் )தமிழில் ,பேசுடுவார் அழகு மொழியில் . கற்றதுவும் தாய் மொழியில் ,கடைசிவரை ,மூச்சென்றார் தன்வழியில் . பெற்ற தாயிலும் மேலென்றார்,நம் மொழியை . மற்றவர்க்கும் உகந்தளிக்க ,மனமுகந்தார்,தனி வழியில் . கனத்த வேளையிலும் ,கலக்கமின்றிச் ,சுமந்து செல்வார் . மனத் தூய்மையுடன் ,மக்களிடம் சேர்த்திடுவார் . பருத்த ஆலாயிருந்து ,பங்களிப்புச் செய்திடுவார் . விருப்புடைய பட்சிகளை ,வரவேற்று வளர்த்திடுவார் . ஆகா .......வியப்பில் ;;;;;;;;; விழிகள் ;;;;;;; இறுதிவரை தொடரும் ,,,, பணிகள் . ஆக்கம் பொன்.தர்மா