உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

pon.tharma

pon.tharma

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம் ,இல.534 தலைப்பு . கறுப்பாஜி ,சிகப்பாஜி ,வெள்ளாஜி. ------------------------------------------------------ கறுப்பாஜி ,சிகப்பாஜி . கரையோர வெள்ளாஜி. (நீ ) காதல் என்றும் உன்மேலே ,கடைசிவரை மறவாதே . கலர்களுக்குள் பேதமுண்டு ,கடமைகளில் திறமையுண்டு (உன்) மதங்களுக்குள் பேதமுண்டு ,வெண்ணிலாக்குப் பேதமேது . அயர்விலாது உழைத்துவிட்டால் ,அடடா அள்ளித் தருவாயே . வியர்வை அதைச் சிந்த விட்டால் ,வெகுவாய் அள்ளிக் குவிப்பாயே . புதைந்து (உன்னிடம் )கிடக்கும் புதையல்களைப்,புத்தியைத் தீட்டிப் பெற்றிடனும் . மறைந்து கிடக்கும் மர்மங்களை ,மக்களுக்கெல்லாம் பகிர்ந்திடணும் மாசில்லாத கொடையாளி ,மக்களுக்கெல்லாம் தாயே நீ . ஆசுஅற்ற உணவு தந்து ,மூலிகைகள் பலவும் தந்து - மக்கள் நலம் காக்கும் நீயே மகராசி . (நீ)மனம் வைத்தால் ,குடிகள் உயரும் தனி ராசி . மகாமாரி கண்விழித்தால் ,மலையின் உச்சி எற வைப்பா .(இந்த ) மண்ணுக்குள்ளே பொன்னைக் காட்டி ,அண்டத்தவரை மகிழவைப்பா. ஆக்கம் பொன்.தர்மா