உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

pon.tharma

pon.tharma

கவிதை இலக்கம் -533 புழுதி வாரி எழும் மண்வாசம் . சோழகக் காற்றது சுற்றி அடிக்க . சுமை கொண்ட கிளைகளும் சுழன்றுமே முறிய . கூடிய கூட்டமோ கூழுண்டு மகிழ . தேடியே அண்டாவைத் தேர்ந்துமே எடுக்க. ஆச்சியும் மகளும் ;அடுக்களை உபயம். அண்டாவை நிரப்ப ,ஆறு உமல் ,அசைவம் . துடிக்கிற நண்டுகளைச் ,சுழற்றி ,ஒரு அடிப்பு . தொங்கிடும் தலைகளை ,நறுக்கி ஒரு வெட்டு . அவிகின்ற கூழ் ,அது ,அக்கம் ,பக்கம் எல்லாம் ,கம கமப்பு. அடுத்தவர் வாசலுக்கும் ,அது சென்று ,வரவழைப்பு . குடிக்கின்ற கும்பலும் ,கூடி நின்று ,பரபரப்பு . கோலிய ,பலாவிலையால் ,கூழுமோ ,அள்ளிக் குடிப்பு. அடித்திடும் காற்று ,அதனால் ,அங்கமெல்லாம் ,புழுதி ஒட்டிப்,பிசுபிசுப்பு . குடித்திடும் கூழ் சுவையை ,மறைத்திடும் ,புழுதி வாரி எழும் மண் வாசம் . பொன்.தர்மா