உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Kavikco Parama Vsvalingam

Kavikco Parama Vsvalingam

https://www.youtube.com/watch?v=bIyPWkIjPwQ வளர்ந்த குழந்ழைதகள் தாமே…. பிறக்கின்ற குழந்தை அழுகின்றது – ஏன் பிறந்தோம் என்றா நினைக்கின்றது தரணியில் பிறந்த அக் குழந்தை – தன் வரவினை உறவிற்கு சொல்கின்றது. அடுத்தது என்ன என்பதனை அதுவாய்த்தானே நினைக்கின்றது எடுத்தடி வைக்கும் முன்னாலே ஏதோ எதுவோ தடுக்கின்றது. கருத்துக்கள் என்னும் கையேட்டை பொறுப்புடன்தானே திணிக்கின்றோம் - அது வெறுப்பினைக் காட்ட முடியாமல் வேண்டுமென்றே சிரிக்கின்றது. பிறப்பினில் பேதம் கிடையாது – அதன் பெமைகள் எவருக்கும் புரியாது வல்லார் மட்டுமே பிறக்pன்றார் - அது அல்லார் இன்னும் பிறக்கவில்லை. வளர்;ந்த குழந்தைகளே – மண்ணில் வாழும் தெய்வங்களே தொட்டிலில் குழந்தைகள் தூங்குவதில்லை சிந்தித்தபடியே சிரிக்கின்றன. சந்திக்கும் அனைத்தையுமே சவாலாய் எண்ணுங்கள் - அந்த சாதனை ஏட்டினை சந்ததிக்காய் எழுதிடச் செய்யுங்கள். உங்களை நம்புங்கள் பிள்ளைகள் உங்கள் அங்கங்கள் பெருமை கொள்ளுங்கள் பேதமை தள்ளுங்கள். கவிக்கோ பரம விஸ்வலிங்கம்