உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

K.Kumaran

K.Kumaran

சந்தம் சிந்தும் வாரம் 161 ஈர ஆடை பாடசாலை மணியோசை கேட்டு மருண்டு ஓடி வந்து நிரையாக நின்று இறை பாடல் பாட ஒரு மாணவனின் கை மறு மாணவனின் ஆடையில் பட்டதே ! ஈரம் காயாத ஈர ஆடையது ! கண்களில் கேள்வியுடன் அவனைப் பார்க்க ஒற்றை ஆடையே உடுத்த இருப்பதால் உலர்த்துகின்றேன் உடல் சூட்டில் ஒவ்வொரு நாளும் என்றான் ஈரமாகி போனதே இவன் கண்கள் ! க.குமரன் யேர்மனி