உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

K.Kumaran

K.Kumaran

சந்தம் சிந்தும் வாரம். 157 சிலுவை ஒன்று பேசுகிறது துயிலும் இல்லத்தில் ஆறடி நிலமும் எனக்கு இல்லை அளந்து வைத்த சிறு இடத்தில் சாம்பல் குடுவையில் அடங்கி போகின்றேன் ! எனக்கு அடையாலம் தருவது சிலுவையில் என் பெயரும் தோற்றமும். மறைவும் எழுதிய முகவரி தான் ! உறவுகள் பந்தங்கள் என்று எவரும் உறங்கவில்லை அருகில் எந்த வித சலனமும் எனக்கு இல்லை நிர்மலமாக அமைதியோடு இருக்கின்றேன்! நாளும் கிழமைக்கு வருபவர்கள் சுத்திகரிப்போடு மெழுவர்த்தி்ஏற்றி நான் சாந்தி பெறுவதற்காக மௌனத்தை தவழவிடுவார்கள் எனக்கு என்று சொத்தும் என்னை முன் நிலைப்படுத்துவதும் எனதாகிக் போன இந்த சிலுவைதான் அன்று! எனக்காக பேசுவதும் சிலுவை தான் இன்று! க.குமரன் யேர்மனி🥲