உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

jeyam

jeyam

கவி 596 விடியலின் உன்னதம் இருட்டுக்குள் கிடந்து தவிப்போர்க்கு விடியலின் உன்னதம் தெரியும் கருமேகங்கள் சூழ்ந்த நிலவினொளியை விழிகள் எப்படி அறியும் பறித்தே சுதந்திரத்தை அடிமைகளாக்கி ஆளுது இன்னும் அதிகாரம் திறக்கப்படா இருட்டறையினுள் தவிபோர் விலங்கினையுடைக்க வருவாரோ யாரும் சிறகுகளிலிருந்தும் பறக்க முடியாது கூட்டுக்குள் அடைபட்டு முடக்கம் இருக்கும்காலம் அது சுமையின் கோலம் விடியாத இரவுகள் அடக்கம் ஒதுக்கியேவைத்து இறுமாப்புடன் வாழும் பூவுலக ஆணவ விஷங்கள் செதுக்கியறிவை ஏற்படுத்தி புரிவை வாழ்ந்திடின் உருவாகாதோ நிசங்கள் காழ்ப்புணர்ச்சிகொண்ட மாந்தர்கள் வாழ்வு இருள் அகன்று விடியட்டும் ஆள்வது காலமும் அன்பாயிருந்து அருள் உள்ளத்தில் படியட்டும் ஒருமுறைதானேயிந்த ஆட்டம் அது மனிதத்தைக் கருவாக்கி இருக்கட்டும் வருகின்ற காலம் ஆண்டானடிமையில்லாத ஒரு குவலயத்தை உருவாக்கட்டும் ஜெயம் 02-03-2022