உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

jeyam

jeyam

கவி 593 பூக்கட்டும் புன்னகை புன்னகையைப் பழகிக்கொள்ள வாழ்க்கை அழகாகும் புன்னகை செய்துபார் நீ தொலைத்த முகத்தை திரும்பப் பெறுவாய் பாறைமனமும் மகிழ்ச்சி வேர்விடும் புன்னகைத்துப்பார் உன்புன்னகையே இன்னும்பல புன்னகைகளை உருவாக்கும் எனவே புன்னகைசெய் உதடுகளிலிருந்து புன்னகைக்கு விடுமுறையா புன்னகைக்கப்பார் நீ விலங்குகளிலிருந்து வேறுபடுவாய் நீ புன்னகைத்தால் உன் இடுக்கண் செயலிழந்துவிடும் கோபம் சுவாசமிழக்கும் நீ குழந்தையாகிவிடுவாய் புன்னகையென்பது இலவசமாகக் கிடைக்கும் ஒரு அருமருந்து புன்னகையைக் கற்றுக்கொள் ஆயுளை பெற்றுக்கொள் கவலைகளை அழிக்கும் ஒரே கருவி இதுதான் மன இறுக்கத்தை நொறுக்கும் கதாயுதமும் இதுதான் புன்சிரிப்பு விலைகொடுத்து வாங்கக்கூடியதொன்றல்ல புன்னகையை மட்டும் அணிந்து பார் பலரால் நீ கவரப்படுவாய் மனிதர்கள்முன் சிரிக்க யார் தடைபோட்டது அப்படியாயின் காண்ணாடியின் முன்னின்று முதலில் புன்னகைப் பயிற்சிசெய் ஒரு சிறு புன்னகை வானளாவிய அன்பை உருவாக்கும் ஒரு மெல்லிய புன்னகை காதலை உற்பத்தி செய்துவிடும் ஒரு கள்ளங்கபடமற்ற புன்னகை இதயங்களை கொள்ளையடித்துவிடும் ஒரு பரந்த புன்னகை வெறுப்பவரையும் எதிரியையும்கூட நட்பாக்கிவிடும் இன்னும் எதற்காகவோ புன்னகையில் கஞ்சத்தனம் சிந்தாவிட்டால் புன்னகை வாழ்க்கை அது நரகம் புன்னகையை முகத்தில் குடியிருத்திப்பார் அகம் நிலையான சுகம் காணும் ஒன்றை அறிந்துகொள் புன்னகை மட்டும் தான் பக்கவிளைவில்லாத மருந்து எனவே முயற்சித்துப்பார் அறுசுவைகளையும் தாண்டி நகைச்சுவையையும் அறி புன்னகை ஒரு கலை அதைப்படி புன்னகை மகத்துவமானது அதன் தத்துவம் கல் புன்னகை பேரழகு அதை உதட்டால் செய் புன்னகை வாழ்க்கையில் வெற்றிக்கான மந்திரம் அதைத் தினம் உச்சரி. ஜெயம் 02-02-2022