உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

புரிவினை அடை மனமே மென்மையான உள்ளம் கொண்டோர் மேலோராக வன்மத்தை மனதில் கொண்டோர் கீழோராக அன்னை சொல்லை மதிப்போரெல்லாம் நல்லோராக மண்ணில் அழிவை செய்வோரெல்லாம் பொல்லாராக  கற்றோரை கனம் பண்ணுதல் முறையே அற்றோரை ஒதுக்கி வைப்பதும் குறையே  வற்றாத அன்பை கொண்டோரெலாம் இறையே சிற்றறிவால் எட்டாதவொன்று குறையுமொரு நிறையே உள்ளபொழுது ஈர்ந்தளித்தல் இதுதானே மனிதம் எள்ளையும் எட்டாய்ப்பகிர்தல் மானுட புனிதம் செல்வம்   வரும்போகும் வரட்டுமங்கே புரிதம்  உள்ளத்தால் உயர்ந்தோரே இடம்பிடிப்பார் சரிதம்  ஜெயம் 11-03-2022