உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

பாமுகப் பூக்கள்   சிந்தை சுவைக்கும் சந்தப் பாக்கள் சிந்திக் கிடக்கும் பாமுகப் பூக்கள் உச்சரித்தார் மொழியை அமுதானது செவியோடு  அச்சேறி விழிசுவைக்க நூலாகவும் வெளியீடு  பொருள்கொண்ட சொல்லெடுத்து மொழியுடனிங்கு விளையாட்டு  அருளெனவே கிடைத்துவிட்ட தொகுப்பாளருக்கும் பாராட்டு  பாலோடு பழம்சேர்த்து உண்டதைப்போல் நிறைவுவரும்  தாலாட்டும் வார்த்தைகள்கொண்ட செவ்வாய்மாலை உவகைதரும்  எத்தனையெத்தனையோ பாவலர்களின் கவி ஆக்கங்கள்  அத்தனை படைப்புக்களும் பெருக்கிடும் உற்சாகங்கள்  பல்வேறு கவியாளர்களின் கவிப்பாட்டு பரவசமே  சொல்லாடல் அவர்கேட்டு மொழிமகிழும் இதுநிசமே  சந்தங்கள் முத்தம்கொடுக்கும் கவிகளைக் கண்டு  மொத்தமாக சந்தோசித்து தவிப்பதும் உண்டு  ஆட்டிவிக்கும் மனங்களையே மொழியாலொரு நிகழ்வு  கேட்டுவிடக் கேட்டுவிட உயிருக்குள்ளூறிவிடும் மகிழ்வு  என்னவிதமான தலைப்பிற்கும் கொடுப்பார்கவி இவர்கள்  சொன்னதேயேசொல்லாமல்  படைப்பார்கவி எவர்கள்  தளந்தந்திடும் பாமுகத்தை வாழ்த்தவென துடிக்கின்றேன்  உளந்தந்த பாவைஜெக்கு நன்றிகூறி முடிக்கின்றேன் ஜெயம் 07-01-2022