உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

கவிதை நேரம்-06.01.2022 வியாழன் கவி இலக்கம்-1937 மாற்றத்தின் திறவுகோல் இன்னமும் விடை தெரியாத காலமாக கேள்விகளுடனே விடிந்த புத்தாண்டே வாசல்களை மட்டும் திறந்து விட்டு கதவுகளை மூடி வைத்துள்ளது ஏனோ மாண்டு வரும் மனிதத்தை மலரச் செய்து மாற்றம் காணும் மாதமாகி தை மாதத்தை அடையாளம் உணர்த்தும் வரிசையில் தந்ததேனோ பொன்போன்ற நேரமதை பயனாக்கி பெறுவதிலும் தருவதே பேரின்பமாய் மனிதத்திலே மாற்றம் பெற்று வாழ்வோமே வெற்றிதனை பெற்றிடவே உழைத்திடவே உலகிற்கு ஒளியான ஊடகத்தை தருகின்ற செய்திகளை நாம் அறிந்து தரணியிலே இளையோரை தமிழிலே ஊக்குவிப்போம் பட்ட நல்ல அறிவினை பகிர்ந்தளித்து சான்றுகள் பெற வளர்த்திடுவோம் ஆன்மீக வாழ்வில் அக்கறை கொண்டு நாம் தானமும் தர்மமும் பகிர்ந்தளிப்போம் தன்னலம் நம்மிடையே விடை பெற வளரும் சமுதாயத்தை ஊக்கிவிப்போம் தட்டிக் கொடுப்பதும் தடவிக் கொடுப்பதும் ஊக்குவிப்பதும் பகிர்தலும் ஒரு திறவுகோலே நாளை விடியலுக்காய் நல்லதோர் சமுதாயம் அமைப்போம் மாற்றத்தில் நல்லதை பெறுவோம்