உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-04.01.2024 கவிதை இலக்கம்-1795 புத்தாண்டை வரவேற்றபடி ---------------------------- ஆங்கில புத்தாண்டே புலர்ந்திட வருக உலகமெலாம் இன்னிசை ஒலித்திடவே வருக உளம் மகிழ வரவவேற்று நிற்கிறோம் வருக புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டமே புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி மகிழ்வோமே அவனியில் மக்களை மகிழ வைக்க வருக மனித நேயம் மாண்புடன் பகிர வருக ஒன்று பட்டு உழைத்து உண்டு வாழ வருக பசி பட்டினி பொருளாதாரம் தர வருக உணவு உறைவிடம் தந்து காக்க வருக வன் கொடுமை நீங்கி நாடு வளம் பெற வருக நல்லதே நடக்க நானிலம் சிறக்க வருக மக்களிடையே மாற்றங்கள மலர வருக அகிலம் முழுவதும் சமாதானம் தர வருக இனிமையான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்