உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-04.01.2024 இலக்கம்-1795 புத்தாண்டை வரவேற்றபடி --------------------------- புத்தாண்டு 2024 ஆக புலர்ந்திடவே உலகமெலாம் ஒலித்திடவே உளம் மகிழ வரவேற்று வலம் வந்தாளே புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டமே பல இடங்களில் திண்டாட்டம் என்பேனே நிலை நடுக்கம் சுனாமி வெள்ளப்பெருக்கு அழிவினிலே இயற்கை அனர்த்தங்கள் தந்தாயே இச்சை கொண்ட உலகினிலே பச்சை உள்ளத்தோடு மிச்சம் நீதி உரைத்திட நாடுகளில் நிம்மதியற்ற நிலைதானே இன்னல் துடைக்க யாருமில்லை பொருளாதாரம் உணவுப் பொருள் விலையேற்றம் பசி பட்டினி மக்கள் அழிவை தந்தாயே தொற்றுநோய் போதை வஸ்து டெங்கு நோய் அனைத்தும் ஆகும் அவனியினிலே அதிசயமான செயல்கள் கொண்டு வந்தாயே உன் கால் தடத்தினை நிலையாய் பதித்திடு இன்றைய நிலையில் நீதியாய் நிலைத்திடு ஈழத்தின் துன்பம் கழையவே வந்து விடு சரித்திரத்தில் நிலையான இடத்தை தந்திடு வையகத்தில் வாழ்வாங்கு சிறப்புடன் வாழ புது உலகத்தை படைத்து புத்தாண்டே தருவாய்