உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-16.03.2023 கவிதை இலக்கம்-1658 ஆகா வியப்பின் விழிகள் நேற்றைய குழந்தைகள் இன்றைய இளையோராக நாளைய மூத்தோரே எம்முடன் மனித வாழ்வின் சுழற்சியில் அமைகிறார் எனது இரு அக்காவிற்கு மூத்த அண்ணராக 90 வயதிலும் இன்றும் எம்முடன் வாழ்வில் விழியாக யோசெவ் இராஜசூரியர் அகவையில் கால் பதித்தார் ஆங்கில பேராசிரியராக கராட்டி பயிற்சியாளராக பிரான்ஸ் சர்வதேச ஆங்கில பாடசாலையில் புகழுடன் பணியாற்றி ஓய்வில் இன்றும் கெம்பீரத் தோற்றமும் விரைவு நடையும் எம்மோடு இன்ப துன்பங்களில் கலந்து பயணித்து கொண்டிருப்பவர் பெரியண்ணர் புத்திமதி பலதும் கூறி வழி காட்டுபவர் எத்தனை முறையேதும் பேசினாலும் மூத்த அண்ணர் என்ற முறையில் தனி மரியாதை யுடன் பயமுண்டு சகோதரர்கள் தேவைக்கு பண உதவி பொருள் உதவிக்கு குறைவில்லை இடைக்கிடை கடிந்து கொள்ளும்போது நாமும் அவரின் நல்வழியை பின்பற்றினோம் சந்தோசமாக வாழ பணம் குணம் இருந்தும் பாசம் காட்ட துணைவியார் தவறினது கவலை பிள்ளைகளுடனும் சகோதரங்களுடனும் தகப்பனாக நின்று உதவும்போது நாம் என்றும் போற்றக் கூடியவராக வாழ்கிறார் எமக்கு பல அறிவுரைகள் பேச்சிலும் கிடைக்கும் அனுபங்கள் பலதையும் சொல்லுவார் செயல்பாடுகள் இறை பக்தி பலதும் கண்டு வியப்பில் ஆச்சரியமடைவதுண்டு இன்றும் எமக்கு துணையாக அருகிலிருப்பதால் மனம் மகிழ்ந்து வாழ்த்தி சுகமே வேண்டுகிறேன்