உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.04.22 கவி இலக்கம்-170 தேடினேன் ------------------------- மழையும் குளிரும் சுழல் காற்றினிலே கதிரவன் ஒளியை நாடி தேடினேன் பட்டுக் காய்ந்த நின்ற மரத்தினிலே பச்சையிலை துளிர்களை தேடினேன் அலைமோதும் நீலக் கடனிலே அமைதி நிம்மதி பெற தேடினேன் ஒட்டகம் வாழும் வரண்ட பாலைவனத்திலே பூஞ்சோலை வனப்பை தேடினன் தனிமையில் ஒதுங்கி நின்ற நிலையினிலே உதவி பெற மனித நேயத்தை தேடினேன் இருண்டு மறைந்த வாழ்வினிலே ஒளியான இடம் கிடைக்க தேடினேன் மனம் சாந்தி பெற்று ஆறுதல் பெறுதலினிலே இறைவனைக் கண்டு கொள்ள கோவிலில் புகுந்தேன்