உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

தினம் ஒரு பாமுகக் கவி-5.01.2022 செவ்வாய் கவி இலக்கம்-1447 மலரட்டும் நம் நாடு ------------------------- மண் வளமும் நீர் வளமும் இயல் வளமும் இசை வளமும் கலை வளமும் பண்பாட்டு வளமும் கொண்ட நாடே எம் தாய் நாடு தொன்மை மிகு தமிழ் மொழியில் புகழ் பெற்று வாழ்ந்த எம் மூத்தோர் மங்காப் புகழ் பெற்ற தமிழையும் கலைகள் அத்தனையும் வளர்த்தனரே பண்பாட்டு விழுமியங்கள் பலதை பண்பாடாய் நிலை நிற்க உழைத்தவர்கள் சான்றுகள் பலதையும் விட்டுச் சென்றனரே ஒன்றாக நின்று ஒற்றுமையின் பலமாகி உழைத்த பலர் வரலாறு படைத்தனரே ஒளி இருந்தும் இருளை எதற்கு வழி இருந்தும் வலி எதற்கு துணிந்து நின்று மூத்தோர் வழி நடப்போமே