உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-11.01.2022 கவி இலக்கம்-1439 சமுதாய பெண்ணவள் அதிகாலை கண் விழித்து குளித்து முழுகி கோலம் போட்டு கடவுளுக்கு மலர் சாத்தி கும்பிட்டு அடுக்களை நோக்கி ஓடுவாள் வெளி வேலை வீட்டு வேலையென பாரமாக குடும்பத்தை சுமந்திடுவாள் வற்றிய வயிற்றுடன் களைப்பின்றி ஓடி ஓடி தன் பணியை செய்திடுவாள் தாயாய் தாரமாய் தாதியாய் ஆனவள் சாயாது தனது இல்லத் தலைவி ஆவாள் கடமையை செய்து களிப்புற மகிழுவாள் உடைமைதனை சேர்த்து பக்குவப் படுத்துவாள் காலா காலமாய் ஒதுக்கப் பட்ட பெண்கள் கொடி கட்டி பறந்து அற்புதங்கள் செய்கிறாள் முன்னேற்ற பாதையில் முன்னிலையில் சமூகத்திலே