உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

annaikku nikarundo avaniyile

annaikku nikarundo avaniyile

09.05.24 கவி ஆக்கம்-315 அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே அன்புக்கு விலையுண்டோ பவனியிலே பொறுமைக்கு உவமையுண்டு தாயினிலே அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே உண்மைக்கு உரிமையுண்டு அன்னையிலே எத்தனை துன்பம் வந்திடினும் மறந்து அத்தனையும் கனிவோடு இன்பம் தந்து தன்னுயிர்ச் சொத்தாகப் பாதுகாத்து பத்து மாதம் தன் வயிற்றில் கரு சுமந்து பெற்றெடுத்து இனிதாய் வளர்த்த பெருமை தாயின் தரத்துக்கு வரமேது சேய்க்குத் தலையிடி எனில் தனக்கு வந்ததெனப் புழு போலத் துடித்துத் துவண்டிடும் அருமை நோய் வந்திடினும் பாயில் படுக்காது நெருப்பில் வெந்து வாய்க்கு ருசியாக வயிறார உண்பது பார்த்து மகிழும் அன்னையே உனக்கு நிகருண்டோ அவனியிலே அன்புத் தெய்வமே .