உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Abiramy Kavithasan

Abiramy Kavithasan

29.03.2022 சந்தம் சிந்தும் வாரம் -168 „தாய்மண்ணே வணக்கம்“ சின்னஞ்சிறு தீவே சிரித்திருந்த பூவே உன்றன் எழிலழகு உருகியதும் ஏனோ / வெள்ளைமன மக்கள் வீற்றிருந்த மண்ணில் பிள்ளையழும் பஞ்சப் பிணி வந்ததேனோ / சுட்டமண் தாய்நாட்டை சுந்தர தமிழராண்டான் கட்டிக்காத்த நாட்டுபற்றறுத்து கடல்தாண்டி மீண்டும்பயணம் / சுற்றுலா தளமழகை சூட்டிய பசுமையே ஏற்றுமதி தேயிலையும் ஏற்றம்கண்ட என்நாடே / யுத்த காலத்தில் யுகத்தை கைவிடவே சத்தமின்றி அயலவன் சதிதிட்டம் தீட்டினர் / திட்டம் போட்டு நாடையாழ திசைக்கொருவன் நின்று வட்டமிடும் கழுகுகூட்டம் வஞ்சக நெஞ்சத்தினர் / தாய்மண்ணே வணங்குகின்றேன் தார்மீக பற்றுடனே மாய்ந்திடாதே மலர்ந்திடுவாய் மகிழ்ந்திடுவேன் மண்மீதில் / நன்றி வணக்கம் பாவைஅண்ணா🙏