உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஷர்ளா தரன்

ஷர்ளா தரன்

ஆயிரம் சொல் இருந்தென்ன ஆசான் என்ற சொல் ஆயுள் உள்ளவரை வந்திடுமே அலைந்து திரிந்து அகப்பட்டதை பொறுக்கி நளினத்துடன் நகைச்சுவையாய் நசுக்கென்று மண்டையில் ஏற நல்லவற்றை கற்பித்து நல்லவனாய் வாழ வைத்து தெய்வமாய் வாழ்கின்றவர்கள் ஏற்றம் இறக்கம் பார்க்காது உணவு இடைவேளை இன்றி ஊக்கமுடன் ஊட்டி விட்டவர்கள் அறிவுப்பசியை காட்டிவிட்டவர்கள் கற்றவரோடு கலந்துரையாட அறிவு தந்தவர்கள் பெற்றோருக்கு அடங்காதவர் ஆசானுக்கு அடங்கியவர் வானால் குண்டு மழை காதை கிழிக்கும் வெடிஓசை உயிர் காக்க பதுங்கு குழி ஊடறுத்து கல்வி ஊக்குவித்த ஆசான் அறிவை ஊட்டிவித்த ஆசான் ஷர்ளா தரன்