உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வீடு

வீடு

ஜெயம் கடல் காட்டை சுமந்திடும் பூமி உடல் கூட்டையும் தாங்கிடும் சாமி பாறைகள் மலைகள் அருவிகள் ஊற்று சோறையும் நீரையும் தந்திடும் சேர்த்து சீராட்டி வளர்ப்பதில் இன்னோர் அன்னை வாழ்த்தியே வணங்கிடுவோம் வாழுகின்ற மண்ணை பிரபஞ்சத்தில் அனைவருக்குமான ஒரேயொரு வீடு வரவாக்கி வளங்களெல்லாம் அடைந்துகொண்டோமே பேறு இயற்கையின் எழிலை அணிந்துகொண்ட கோலம் பயன்களை மடிதாங்கி சுழன்றிடும் கோளம் அகழ்வாரையும் தாங்கிடும் அதிசய நிலம் நிகழ்கால வெற்றியின் ஆட்டத்தின் களம் பேராசை பிடித்தவரால் சிதையலாமோ கிரகம் பாராது விளைவுகளை ஆக்குகின்றார் நரகம் மானிட இனத்திற்கே கடமையொன்று உண்டு மாநிலத்தைக் காப்பதே அதுவாக இன்று 26-10-2025