உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விளையாட்டுப்போட்டி

விளையாட்டுப்போட்டி

நகுலா சிவநாதன் விளையாட்டுப்போட்டி ஆண்டு ஒன்று வந்திடுவே அகத்தில் மகிழ்வு தந்திடுமே! சிறுவர் மகிழும் விளையாட்டும் சிறப்பாய் நடக்கும் போட்டிகளாய்! TSS SELM கழக விளையாட்டில் வீரம் சிரிப்பு கலந்திருக்கும் முயற்சியுடனே ஓடும் சிறுவர் முகத்தில் படரும் புன்னகை பலவாய் பாய்ந்து பாய்ந்து விளையாடும் பாலர் ஆட்டம் பார்க்கையிலே பட்டொளி வீசும் வீரம் பாராய்!! பலமாய் ஓடும் பிள்ளைகளும் பந்தை பொறுக்க முயல்கையிலே பலமும் சேர்ந்து ஓங்குகையில் வெற்றி ஒன்று கிடைக்கையிலே பற்றி மகிழும் சிறுவர் குழாம் போட்டி யென்று வந்துவிட்டால் ஈட்டும் புள்ளி வெற்றியிலே காட்டும் வீரம் மனத்தினிலே காதல் கொள்ளும் விளையாட்டில் நகுலா சிவநாதன் 1859