உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" விரல் நுனியில் அறிவியல் "

" விரல் நுனியில் அறிவியல் "

„ விரல் நுனியில் அறிவியல் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 25.07.2024 அற்புதம் நிறைந்த இயற்கையின் ரகசியம் அறிவியல் எனும் அதிசயப் பெட்டகம் அறிவியல் என்பது அறிவொளி அகிலமே இதற்குள் அடக்கம் சூரிய மண்டலம் கடந்து பால்வெளி அண்டத்திற்குள் பயணம் தொடர்கிறது இன்று ! உழைத்துக் களைத்த மனிதனுக்கு உல்லாச வாழ்வினைக் காட்டியது அறிவியல் வீட்டிற்குள் விரல் நுனிக்குள் அறிவியல் விரல் நுனியைத் தட்டிவிட்டால் விந்தையுலகு வந்துவிடும் கைகளுக்குள் தேடலைத் தேட பாடலைப் பாட தகவலைப் பரிமாற தகவல் தொடர்பினைப் பேண ஆய்வுகளை நகர்த்த ஆராட்சிகளைத் தொடர விரல் நுனிக்குள் வித்தகமாகுது அறிவியல் ! வனப்புண்டு வளர்ச்சியுண்டு எழிற்சியுண்டு ஏற்றமுண்டு அறிவியலில் அறிவியல் இயந்திர மானிடமாகி விந்தை தனைப் புரியுது வியப்பினைத் தருகுது விரல் நுனியில் அறிவியல் எமக்கு ஆசீர்வாதம் விழிப்புணர்வு வேண்டும் பயன்பாட்டில் ஆக்கமும் அழிவும் அறிவியலே ! https://www.youtube.com/watch?v=K6gocVyadbI