உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விரல் நுனியில் அறிவியல்

விரல் நுனியில் அறிவியல்

கவி 735 விரல் நுனியில் அறிவியல் விரல் நுனியில் இயங்கும் உலகம் இரவென பகலென ஆக்கங்கள் நிகழும் புதுப்புது நுட்பங்கள் நாளாந்த நுழைவு புதுமையின் நுழைவுகள் அறிவியல் விளைவு விலங்கோடு விலங்காக வாழ்ந்தாரே அன்று நிலவுக்குச் சென்று திரும்புகின்றார் இன்று அறியாது வாழ்க்கையை காட்டுமிராண்டிகளாய் அந்தக்காலம் பொறியியல் நெறிமுறைகளை கையாளுகின்றான் இந்தக்காலம் கடினமான வேலைகளெல்லாம் இயந்திரத்தால் சுலபமானது படித்தவர்கள் படைப்புக்களால் பளுக்களும் பறந்துபோனது கையடக்க கருவி விரல்களே விளையாடும் வையகத்தில் கிட்டத்தட்ட அனைத்துமே கைகூடும் இருபத்தொராம் நூற்றாண்டில் வாழ்வதும் பாக்கியமே அருகினிலே தொழில்நுட்பம் கடுமைகளை நீக்கியுமே புத்திகொண்ட மானிடர் நடமாடும் பூவுலகு உத்திகளின் மேம்பாட்டால் வாழ்வதென்பது இலகு ஜெயம் 25-07-2024