உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" விண்ணின் தேவதை "

" விண்ணின் தேவதை "

ரஜனி அன்ரன் (B.A) “ விண்ணின் தேவதை “ 27.03.2025 இந்திய வம்சாவழியில் உதித்த இலட்சியப் பெண் சுனித்தா இலட்சியக் கனவை நனவாக்கி சாதனை படைத்த விண்ணின் தேவதை மண்ணினை முத்தமிட்டதே மகிழ்வோடு ! விண்வெளியின் மையத்தில் வெற்றியெனும் விளக்கை ஏற்றி விண்மீன்களோடு விளையாடி நிலவோடு உறவாடி நீந்தினாள் விண்ணுலகை கட்டியணைத்தாள் விண்வெளியை தொட்டு விட்டாள் சாதனைச் சிகரத்தை ! நாசாவின் நாயகி நிலாவின் தோழி நட்சத்திரப் பாதையில் நடந்து வானின் மறைபுதிர்களை வென்று வாழ்வின் தடங்களைக் கடந்து வையகமே கொண்டாடி மகிழ வானத்தின் வாசலைத் திறந்து வாழ்வின் வரலாறு எழுதிய விண்ணின் தேவதை விஞ்ஞான உலகின் ஒளிச்சுடரே ! https://www.youtube.com/watch?v=phy1ea3nP8Q