உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

"விடியாத இரவொன்று "

"விடியாத இரவொன்று "

“ விடியாத இரவொன்று “ கவி...ரஜனி அன்ரன் (B.A) 14.03.2024 விடியாத இரவென்று முடியாத நிகழ்வென்று எதுவுமில்லையே இவ்வுலகில் மாற்றிடலாம் மனசு வைத்தால் திடமான மனதிருந்தால் விடியாத இரவுதனை விடியலாக்கிப் பார்த்திடலாம் ! கனவுகளைக் கற்பனைகளை நினைவுகளை நிஜங்களைப் புதைத்து விடுகிறது விடியாத இரவுகளும் புதிரான புதிர்களும் முடியும் முடியுமென்று முனைப்போடு செயற்பட்டால் விடியாத பொழுதுகளை வெளிச்சம் ஆக்கிடலாம் ! இருள் எனும் பெரும்புயல் இருட்டடிப்பு செய்தாலும் பகலவனின் பட்டொளியில் பாரெல்லாம் ஒளிர்ந்திடுமே விடியாத இரவுகள் எல்லாம் விடியல் பொழுதின் எழுச்சியே ! https://www.youtube.com/watch?v=oxLXcRFuyoE