உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று

கவி 715 விடியாத இரவொன்று விடியாத இரவென்று ஒன்றும் இல்லை முடியாத துயரென்று என்றும் இல்லை உழைத்தால் வாழ்க்கை வெளிச்சம் அடையும் மலையைப்போல சுமையும் துகளாய் உடையும் முயற்சியதை தொடராவிட்டால் இயலுமானதும் முடியாதுதான் உயற்சியேது அங்கு விடிந்தாலும் விடியாததுதான் மின்மினி பூச்சிகளுக்கு இரவென்ன திரியவில்லையா விண்ணிலே நிலாவின் உலாவும் தெரியவில்லையா விலங்குகள் இல்லையேயென ஒப்பாரி வைப்பதில்லை விளங்கிய மனிதனால் ஆயுளுக்கும் தொல்லை அடுத்தவரோடு ஒப்பிடின் விடிவொன்று தானேது விடுபடா இருளங்கே வெளிச்சமும் காணாது பஞ்சப்பாட்டாய் பாடிக்கொண்டால் லட்சுமியுந்தான் நுழையுமா பஞ்சிப்பட்ட வாழ்க்கையிலே சந்தோசந்தான் விளையுமா குற்றஞ்சாட்டும் வாழ்க்கை வேண்டாமே இனியும் மற்றவரை பார்க்காவிட்டால் வாழ்க்கையது கனியும் ஜெயம் 13-03-2024