உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வாழ்க்கை

வாழ்க்கை

ஜெயம் சுகங்களின் பிறப்பிடம் சுமைகளின் மறைவிடம் இன்பங்களின் உறைவிடம் துயரங்களின் நீக்கமும் வாழ்க்கை. அப்பப்பா! வாழ்க்கை ஒரு தத்துவம் இனிய கவிதை இனிய கதை, பாசத்தின் களஞ்சியம் நேசத்தின் வாசஸ்தலம். மனமதின் விருப்பு கற்பனையின் தொகுப்பு சிந்தனையின் சிருஷ்டிப்பு கனவுகளின் கோட்டை வாழ்க்கை. புன்னகையுமுண்டு கண்ணீருமுண்டு நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று, வரவுமுண்டு செலவுமுண்டு உறவுமுண்டு பிரிவுமுண்டு. பாதை போட்டவர் இறைவன் பயணம் செய்பவர் மனிதர் வருத்தங்களும் வசந்தங்களும் ஒன்றாய் கலந்த நட்டமும் இலாபமும் கூடிய குதூகலமே வாழ்க்கை.