உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வாழ்க்கை என்பது நீ

வாழ்க்கை என்பது நீ

கவி 733 வாழ்க்கை என்பது நீ வாழ்க்கையின் அர்த்தம் புரிவது எப்போது வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது எப்போது புரிந்தது சில புரியாதது பல நேரம் மட்டுமே வீணாகின்றதா அல்லது வாழ்க்கையும் வீணாகின்றதா சோகங்களை மறைத்த வாழ்க்கை மறந்த வாழ்க்கை அல்ல நீ யோசிக்கின்றபடியே வாழ்க்கை அமைகின்றது அதை நீ மறவாதே அடுத்தவரை கவருவதற்கான அடுத்தவரின் எண்ணங்களுக்காக பலர் தாங்கள் வாழாத வாழ்க்கை இது யாருக்காகவோ இன்னொருவருக்காக ஆயுள் இழப்பு இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலையுடன் தாம் தேர்ந்தெடுக்காப் பாதையிலே பலரின் வாழ்க்கை நகர்கின்றது மகிழ்ச்சியாக வாழ்க்கை உள்ளதா யாருக்காகவோ இயல்பை மாற்றியவரிடம் அது இருக்காது ஏனெனில் அவர் தான் விரும்பாத பாதைகளில் பயணிப்பவர் துணியாத இவர்களுக்கு வாழ்கை பயங்காட்டுமேயொழிய வழி காட்டாது வாழ்வின் அர்தமும் நோக்கமும் மகிழ்ச்சி ஒன்றுதான் ஏன்தானோ பயப்படும்படியான வாழ்க்கை மற்றவர்களின் மூளையில் ஒரு வாழ்க்கையா சரி இல்லாவிட்டாலென்ன கிடைக்காவிட்டாலென்ன வாழ்க்கை வீணடிக்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு அல்ல நீர்க்குமிழியைப்போன்றது மறைவதற்குள் இரசிக்கவேண்டும் வாழ்க்கை அவரவர் விருப்பத்திலேயே வாழப்படவேண்டிய ஒன்று பிரச்சினையோ சந்தோசமோ அவரவர் மனங்களே ஆளட்டும் நீ நீயாக இருக்கப்பழகு பிடித்தவர்கள் அருகிருக்கட்டும் பிற்குறிப்பு அதிக ஆசையில்ல்தவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் வாழுகின்றார்கள் வலியாய் வாழ்க்கை இருக்கின்றதா சிரித்துக்கொண்டே இரு வலிகள் வழிகளாகி நேர்மறை சிந்தனைகள் உருவாகும் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும் மனம் ஆட்டிப்படைக்கக் கூடாது அவமானப்படு அது உன்னைச் செதுக்கும் மீண்டும் உருவாக்கமுடியாத ஒருமுறை தருணம் உன்னைப்புரிந்து தெளிவானால் அதுவே அறிவின் அடையாளம் பிடிக்காத குப்பையைவிட பிடித்த பொக்கிசம் வாழ்வாகலாமே ஜெயம் 10-07-2024