உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வாழ்க்கையோ வாழ்க்கை

வாழ்க்கையோ வாழ்க்கை

கவி 744 வாழ்க்கையோ வாழ்க்கை சிரிப்பு எங்கே சிரிப்பு எங்கே எங்கே போனது துரிதகதி வாழ்க்கையினால் செயலிழந்து போனது பேச்சு எங்கே பேச்சு எங்கே என்ன ஆனது போச்சு போய் பல நாளாச்சு என்று ஆனது வலையொலியில் கானொலியை இரசித்தபடி அம்மா ஒருமூலையில் அலைபேசியில் எதையெதையோ பார்த்தபடி அப்பா ஒரு மூலையில் பிள்ளைகள் எங்கேயென தேடினால் மேலறையில் படிக்கின்றார்கள் தொல்லை யாரும் தராதபடி அறையைப்பூட்டி படிக்கின்றார்கள் விரலை கைபேசியில் தேச்சு தேச்சு ரேகையும்தான் அழிஞ்சுபோச்சு குரலை வெளிக்காட்டாது தலைமுறைக்கு மவுணம் முத்திப்போச்சு தாயகத்து ஆர்ப்பரித்த நிலமை அடியோடு விலகுதிங்கே பேயகமாய் வீடு மாறி மவுணமாக உருவங்கள் உலவுதிங்கே ஜெயம் 09-10-2024