உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“வரமான வாய்ப்புகளே”

“வரமான வாய்ப்புகளே”

நேவிஸ் பிலிப் கவி இல (570) வரமாய் கிடைத்த வாழ்வினை நாம் வளமாய் வாழ்ந்திடவே காற்றுள்ள போதே தூற்றிடணும் வாய்ப்புள்ள போதே கற்றிடணும் கிட்டி வரும் வாய்ப்பனைத்தும் பயணத்தின் பாதைகளாய் எடுத்து வைக்கும் அடிகளெல்லாம் சிகரம் தொடும் படிக்கல்லாய் வரமான வாய்ப்புகளாய் பாமுகத்தின் வாசல் எமக்காய் தினமும் திறந்திருக்கும் காசு பணம் தேவையில்லை முன் பதிவு ஏதுமில்லை வாய்ப்புகள் பலவுண்டு எல்லோர்க்கும் இடமுண்டு ஆன்மீக நெறியுண்டு ஆங்கிலப் பாடமுண்டு ஆர்வம் அறிவு திறமையென முயற்சிகள் பலவுண்டு யோகா பயிற்சியுமுண்டு வயதெல்லை இங்கில்லை அன்புக்கும் பஞ்சமில்லை உறவுகளாய் ஒன்றிணைத்து எம்மை அணைக்கும் கரங்கள் நான்குண்டு ஒருமுறைதான் வாய்ப்புகள் நம் வாசல் கதவு தட்டும் வரமாய் வந்ததை நாம் பலமாய் பற்றிக் கொள்வோம் நெஞ்சம் நிறை நன்றியோடு……….. நன்றி………….