உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வரமாகும் வாய்ப்புக்களே !

வரமாகும் வாய்ப்புக்களே !

ரஜனி அன்ரன் (B.A) வரமாகும் வாய்ப்புக்களே ! 26.02.2026 வாய்ப்புக்கள் வரமாகும் – அவை வாழ்வினிற்கே உரமாகும் சுமையென நினைத்தால் தூரமாகும் சுகமென நினைத்தால் வரமாய் மாறும் இரும்பைக் கவரும் காந்தம் போல் தரமான வாய்ப்புக்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் ! திறமைகளைப் பட்டை தீட்டினால் நிபுணர்களாய் வாழ்ந்திடலாம் வாழ்வில் வாய்ப்புக்களை வெற்றியாக்கி வாழ்ந்திடலாம் சிறப்புடனே வாய்ப்புக்கள் வளமானால் வாழ்க்கை வளம் பெறுவது உறுதி ! வாய்ப்புக்கள் சவாலானால் முட்டிமோதி முயற்சியெனும் தூரிகை கொண்டு முன்னேற்றமெனும் ஓவியம் வரைந்தால் முயற்சியென்ற வாய்ப்பால் முழுமதியாகுமே வாழ்வு உழைப்பால் செதுக்கும் ஒவ்வொரு நொடியும் வாழ்வினை வளமாக்கும் வரமான வாய்ப்புக்களே ! https://www.youtube.com/watch?v=GrjtfpgzdKw