உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

உலகியலில் ஒருமாற்றம்... அழகியல் வனப்பு அலங்காரம் அவனியெங்கும் ஆரவாரம் மனதிடை மகிழ்வா பிரவாகம் கைகளில் தொலைபேசி உறவாடும் இயற்கையின் ரசனை குன்றிடும் இயல்பு வாழ்வு மாறிடும் வீட்டுக்குள் வீடு பல உலகம் விபரங்கள் தெரியாத பலவேசம் உறக்கமற்ற விழிப்பு நிலை உபாதை நிறைந்த உடலின் நிலை நட்பே அற்ற தனிமை வழி நலிந்து போகும் சமூகநிலை உலக நடப்பில் உல்லாசம் உறவுகள் தொலைத்த வாழ்வாகும் மாறிய வாழ்வின் படகிலே இரு தலைமுறைப் பயணத்தின் இடைவேளை மெல்லென ஒடுது சக்கரம் மாறிட வேண்டிய கட்டாயம் மனதிடை பதித்தெழு மாண்பாகும் மல்லிகை மலராய் மணம் வீச நம்மையே நாம் மாற்றல் உலகியலே. நன்றி மிக்க நன்றி