உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

மூலதனம் தேவைக்கு ஏற்ப தேவைப்படும் தேசங்கள் முழுதும் தேடப்படும் மூலப்பொருளாய் மூலதனம் முதலீடாகும் முழஉலகும் வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம் வருமானத்திற்கும் வாழ்வு தரும் உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும் நல் நட்புக்கும் நம்பிக்கை உரம் கொடுக்கும் அறிவுக்கு கல்வியாய் அடிபதிக்கும் அன்புக்கும் இதுவே அடிப்பலம் கொடுக்கும் காலத்திற்கு நேரம் மூலதனம் கவிதைக்கும் கருவே மூலதனம் இன்றைய சூழலின் எழுச்சிக்கு ஊடகப் பணிகள் மூலதனம் ஓற்றுமைக் குரலை ஒன்றிணைக்க ஆற்றிடும் அளப்பெரும் சேவைகள் உயர்வுபெறும் காத்திடம் அறிந்து கருக்கொண்டு காரியம் ஆற்றிடும் ஆளுமையும் ஓருவரின் முன்னேற்ற முனைப்புக்கு மூலதனம் பணம் என்ற ஓன்று மட்டுமல்ல பற்பல வளங்களும் மூலதனம் உயிருக்கு சுவாசம் மூலதனம் உடலுக்கு உயிரே மூலதனம் ஆரோக்கியமே அனைத்திற்கும் மூலதனம் அன்பும் அறனும் பொக்கிஷங்கள் முதலீட்டு வாழ்வோம் மூலதனமாய். நன்றி