உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

11.06.24 ஆக்கம் 150 பாமுகமே வாழி பகலவன் முகம் நெடு நேரம் ஒளி வந்திடுமே 27 ஆண்டு நிறைவுப் பாமுக இலண்டன் தமிழ் வானொலி தொலைக் காட்சியோ காலை மாலை என ஒலி ஒளி தந்திடுமே சகல தாகம் சேர கண் கவர காதில் புகுர நிகழ்வு முகர மணம் பரப்பி மனம் நிறைய சிறுவர் பெரியோர் சுற்றம் சூழ இனிதாய்க் கனிந்திடுமே தாமே தயாரித்து அகல விரிக்கும் பாகம் உரமிட வாசிப்பு,உரை அரும்பு வாசனை முகிழும் முகங்கள் செல்லக் குரல் பேர் புகழ் தொடர்ந்திடுமே நேர் முகமாய்ப் புலம் பெயர் மண்ணில் பாமுக அதிபர் நடா மோகன், வாணி மோகன், சங்கவி போற்றிட பாமுக உறவுகள் பாமாலையில் பூமாலையிட்டு பல்லோரும் பாமுகமே வாழி என வாழ்த்திட விரைந்திடுவோமே ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து